உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளி உற்சவம்

விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளி உற்சவம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவம் நடந்தது. நான்காம் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு இன்று காலை நல்ல தண்ணீர் குளக்கரையில் சக்தி கரகம் ஜோடித்து பெண்கள் 108 பால் குடங்களுடன் ஊர்வலமாக வந்து முத்துமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து ஆராதனையும் , துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்று , அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நான்காம் வெள்ளி உற்சவதாரர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். 


ஆற்காட்டம்மன் கோவில்; விக்கிரவாண்டி நல்ல தண்ணீர் குளக்கரையில் எழுந்தருளியுள்ள ஆற்காட்டம் மன் கோவிலில்ஆடி மாத நான்காம் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு ஆற்காட்டம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !