மேட்டுப்பாளையத்தில் ஆடி வெள்ளி வழிபாடு; அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம்
மேட்டுப்பாளையம், நகர இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஐந்தாம் ஆண்டு ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதம், அம்மனுக்கு புனித மஞ்சள் நீர் அபிஷேகம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில் துவங்கிய ஊர்வலம் ஊட்டி சாலை வழியாக சென்று பேட்டை மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அங்கு தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகள் விரைவாக நடத்தி முடிக்க வேண்டியும்,தொழில் வளம் மேம்படவும் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் மஞ்சள் நீர் குடத்தை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக பங்கேற்று பேட்டை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக ஊர்வலத்தை இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார்,மாவட்ட செயலாளர் சதீஷ்குமார்,மாவட்ட துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர்.