உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுகடம்பூர் அன்னை பவதாரணிக்கு ஆன்மசாந்தி பிரார்த்தனை

சிறுகடம்பூர் அன்னை பவதாரணிக்கு ஆன்மசாந்தி பிரார்த்தனை

செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் சித்தாஸ்ரமம் ஸ்தாபகர் அன்னை ஓம் பவதாரணி மகா சமாதி நிகழ்ச்சி நடந்தது.


கடந்த மாதம் 21ம் தேதி அன்னை ஓம் பவதாரணி இறந்தார். 23ம் தேதி மகா சமாதி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று ஜீவசமாதியில் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் சிவாச்சாரியார் குழுவினர் வேத பிரார்த்தனை, குரு வந்தனம், மகா நாராயண உபநிஷத் பாராயணம், பிரதிஷ்டா மூர்த்திகள் மற்றும் சமாதி அபிஷேகம் செய்தனர். தொடந்து சிவபுராணம் வாசிப்பு, தமிழ் பிரார்த்தனை நடந்தது. சாதுக்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசியர் டாக்டர் மகேஸ்வரி, ஸ்வேத பத்மாசனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் உமா, விஜயகுமாரி, டாக்டர்கள் திவ்யதாரணி, கார்த்திகேயன் மற்றும் சாவித்ரி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !