1008 வளையல் அலங்காரத்தில் முத்துமாரியம்மன் அருள்பாலிப்பு
ADDED :20 hours ago
கோவை; ஆடி மாதம் நான்காவது வெள்ளிகிழமையை முன்னிட்டு நேற்று கோவை தடாகம் ரோடு பால் கம்பெனி தெலுங்குபாளையம் பால் சொசைட்டி எதிர்ப்புறம் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் 1008 வளையல் அலங்காரத்தில் மூலவர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.