பூட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3 நாட்கள் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 29ம் தேதி தேர் திருவிழா தொடங்கி 3 நாட்கள் நடந்தது. சங்கராபுரம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். விழா முடிவடைந்த நிலையில் கோவில் நிரந்தர உண்டியல் மற்றும் தற்காலிக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடந்தது. இந்து அறநிலையதுறை சங்கராபுரம் சரக ஆய்வாளர் கவின்குமார், திருக்கோவிலுார் சரக ஆய்வாளர் கவிதா, ஊராட்சி தலைவர்கள் பூட்டை ஜீவா கொளஞ்சியப்பன், செம்பராம்பட்டு வைத்தியநாதன் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய், 29 கிராம் தங்கம், 11 கிராம் வெள்ளி காணிக்கையாக இருந்தது.