காஞ்சிபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம்
ADDED :16 hours ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழா கோலாகலமாக இன்று நடந்தது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 14வது ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளி கவச அலங்காரமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 22ம் தேதி இரவு 10:00 மணிக்கு ஸ்ரீஜெயம் நாடக மன்றத்தினரின் பக்தி நாடகம் நடக்கிறது.