பழநியில் 600 கிலோ பூ அலங்காரம்
ADDED :4689 days ago
பழநி:பழநி தைப்பூச விழாவிற்காக, சேலம் இடைப்பாடி பருவதராஜகுல சமூகத்தினர் நடத்திய படித்திருவிழாவில், 600 கிலோ பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. இச்சமூகத்தினர், பாரம்பரியமாக பழநி தைப்பூசத்திற்கு, பாதயாத்திரையாக வருகின்றனர். பிப்.1, பால்காவடி, இளநீர்காவடி, புஸ்பக்காவடிகளுடன் மலையில் தங்கி வழிபாடு நடத்தினர். படிகளில் சிறப்பு பூஜைகள் செய்தும், வெளிப்பிரகாரத்தில், மல்லிகை, செவ்வந்தி, ரோஜா, அரளி, தாமரை உட்பட பத்து வகையான பூக்களால் (600 கிலோ) "ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை வரைந்தனர்.