பரமக்குடி ஞான யோகானந்த ஆசிரமத்தில் அன்னதானம்
ADDED :20 hours ago
பரமக்குடி: பரமக்குடி ஐ.டி.ஐ., எதிரில் உள்ள மரக்காயர்பட்டணத்தில் குரு சீதாராம சுவாமிகள் ஞான யோகானந்த ஆசிரமத்தில் 13 வது ஆண்டு அன்னதான விழா நடந்தது.
இங்கு நேற்று காலை 8:00 மணி துவங்கி ராஜகணபதி மற்றும் சிவலிங்கத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஆடி அமாவாசையின் முக்கிய நிகழ்வாக பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தி இன்னிசை கச்சேரி நடத்தப்பட்டது.
பரமக்குடி, எமனேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் செய்தனர்.