உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றில் மிதந்து வந்த அம்மன்

ஆற்றில் மிதந்து வந்த அம்மன்

புதுச்சேரி அருள்மகுடமாக விளங்கும் வீராம்பட்டினம் ஸ்ரீ செங்கழுநீர் அம்மனின் பெயர் காரணம் என்ன. எப்படி இந்த மண்ணில் எழுந்தருளினார். அதன் பின்னணியில் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு வரலாற்று அதிசயம் உண்டு.

மன்னர்கள் காலம், ஆங்கிலேயர் காலம் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி காலங்களில், ஆந்திர மாநிலத்தில் தொடங்கி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழியாக கன்னியாகுமரி வரை பாயும் பக்கிங்காம் கால்வாய் வழியாகத்தான் மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்கவும், வர்த்தக சரக்குகளை ஏற்றிச் செல்லவும் படகுகளைப் பயன்படுத்தினர்.

அந்த காலத்தில் ஆற்றின் இரு மருங்கிலும் அடர்த்தியாக பூத்துக் குலுங்கியவைதான் சிவந்த நிறமுடைய செங்கழுநீர் பூக்கள். அப்படியொரு நாளில், ஆற்றில் மிதந்து வந்த ஒரு மரக்கட்டையில் அம்மனின் திரு உருவம் பதிந்திருப்பதை மக்கள் கண்டெடுத்தனர். அந்த அபூர்வக் கட்டையில் அம்மனின் முகம் மற்றும் கழுத்து வரை மிகவும் அழகாக பதிந்திருந்தது.

செங்கழுநீர் பூக்கள் நிறைந்த ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாலும், அம்மனின் கழுத்து வரை உருவம் பதிந்த மரக்கட்டையாகக் கிடைத்ததாலும் தாய்க்கு செங்கழுநீர் அம்மன் என்ற திருநாமம் சூட்டி ஊர் மக்கள் பக்தியோடு வழிபடத் தொடங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !