உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அருள்பாலித்த அழகு நாச்சியம்மன்

 ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அருள்பாலித்த அழகு நாச்சியம்மன்

 பல்லடம்: பல்லடம் அருகே நல்லுார்பாளையம் அழகு நாச்சியம்மன் கோவிலில், ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தி அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.


நுாறு ஆண்டுகளுக்கு முன் பெண்களிடம்தவறாக நடக்க முயன்ற ஆங்கிலேயப் படையினருக்கு கண் பார்வை பறிபோக, அழகு நாச்சியம்மனை வேண்டிப் பார்வை திரும்பப் பெற்றதால், நன்றிக்கடனாக கதர் மற்றும் பட்டு சேலைகளை வழங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.பெண்களுக்கு அடைக்கலம் தந்ததால் அடைக்கல அம்மன் என்றும் அழைக்கப்படும் இந்த அம்மனுக்கு, ஆடி மாதங்களில் மட்டும் அந்தப் புடவை உடுத்தப்பட்டு பின்னர் பத்திரப்படுத்தப்படுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !