உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் விழா

கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் விழா

கமுதி: கமுதி அருகே பாம்புல் நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடி பொங்கல் விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது.

இதனை முன்னிட்டு விளக்கு பூஜையில் இப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் 108 போற்றி மந்திரங்கள், அம்மன் துதி பாடல்கள் பாடி கூட்டு வழிபாடு செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !