திருவாடானை சிநேகவல்லி அம்மன் ஆடி தபசு கோலம்
ADDED :3 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக சிநேகவல்லி அம்மன் தபசு திருக்கோலத்தில் எழுந் தருளினார். உலக உயிர்களின் நலனுக்காகவும், இறைவனை அடைய அம்மன் மேற்கொண்ட தவத்தை உணர்த்தும் வகையில் இந்த திருக்கோலம் அமைந்திருந்தது.
தபசு நிறைவடைந்ததும் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.