கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் கஞ்சி கலய விழா
ADDED :22 hours ago
மானாமதுரை: மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதம் பிறந்தவுடன் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பெண்கள் கோயில் முன்பாக கும்மிப்பாட்டு பாடி அம்மனை வழிபட்ட பின்னர் கூல் காய்ச்சி பக்தர்களுக்கு ஊற்றினர். இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஏராளமான பெண்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே கஞ்சி கலயங்களை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக கோயிலை வந்தடைந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.