உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூளாங்குறிச்சி ஓம்சக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

சூளாங்குறிச்சி ஓம்சக்தி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்தா ஆற்றங்கரை பகுதியில் ஓம்சக்தி அம்மன் கோவிலில் சுவாமிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி, அம்மன் சுவாமி உருவம் ஜோடித்து எழுந்தருள செய்தனர். தொடர்ந்து, பொது மக்கள் தங்களது வீடுகளில் இருந்து சீர்வரிசை பொருட்கள், 9 வகையான உணவுகள், வளையல்கள் ஆகிய வற்றை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு அம்மன் பாடல்களை பாடி அம்மனுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு செய்யப்பட்டது. பின், அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட வளையல்கள் பிரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !