திரவுபதி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்; சக்தி கரக ஊர்வலம்
ADDED :1 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.14 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு கிராமத்தார்களில் மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பெற்றார் தேவன் கோட்டை கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வாக, சக்தி கரகம் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக அரசூரணி குளக்கரையில் இருந்து கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து, திரவுபதி அம்மன் கோயிலை பக்தர்கள் அடைந்தனர். தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, இளைஞர்களின் பீமன் வேட நிகழ்வு நடைபெற்றது. இதில் இளைஞர்கள் உடலில் வர்ணம் பூசியும், வேப்பிலைகளை கட்டிக் கொண்டும் நகர்வலம் வந்து, திரவுபதியின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்தனர்.