உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதப்பிறப்பு, சஷ்டி விரதம்: பெருமாள், முருகனை வழிபட வெற்றி தேடி வரும்!

மாதப்பிறப்பு, சஷ்டி விரதம்: பெருமாள், முருகனை வழிபட வெற்றி தேடி வரும்!

ஆவணி மாதம் சிம்ம ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் நாளுடன் பிறந்தது.  இது பல முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகும். ஆவணி மாதம் முழுவதும் சோமவார (திங்கட்கிழமை) சிவ வழிபாடும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய வழிபாடும் செய்வது சிறப்பு.. இன்று பெருமாள் கோவிலில் 27 முறை வலம் வந்து, கொடிமரத்தின் கீழ் தாமரை மலர் வைத்து வழிபட்டால், வேண்டுதல்கள் நிறைவேறும்


முருகப்பெருமானின் அருள் பெறும் விரதங்களில் சஷ்டி விரதம் முதன்மையானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். குழந்தைப்பேறு உண்டாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு உகந்த சஷ்டி திதியாகும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். இன்று சரவணபவ சொல்லி ஆறுமுகனை ஆராதிப்போம்..! முருகனை வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.. எதிர்பார்ப்பு யாவும் நடக்கும்.!  வீட்டில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாராயணம் செய்து வழிபட வேண்டும். இன்று பெருமாள், முருகனை வழிபட தடைகள் நீங்கும், உடல் நலம் சிறக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !