பூவாலை தீப்பாய்ந்தால் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :1 hours ago
புதுச்சத்திரம்: பூவாலை தீப்பாய்ந்தால் அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது. விழா கடந்த 12 ம் தேதி காலை 9.00 மணிக்கு, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 14 ம் தேதி சாகை வார்த்தல், 15 ம் தேதி இரவு 7.00 மணிக்கு விளக்கு பூஜை, 16 ம் தேதி அம்மன் வீதிஉலா நடந்தது. சிறப்பு விழாவான தீமிதி திருவிழா நேற்று நடந்தது. அதையொட்டி காலை 9.0 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5.00 மணிக்கு கரகம் அலங்கரித்து, ஜலம் திரட்டி மாலை 6.00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. (18 ம் தேதி) இன்று இரவு 9.00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. 19 ம் தேதி நாளை மஞ்சள்நீர் விளையாட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.