உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

ரிஷிவந்தியம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த பேரால் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று நடந்தது.


தேர்திருவிழா கடந்த 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, பாரதம் பாடும் நிகழ்ச்சியும், தினமும் இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. கடந்த 14ம் தேதி நடந்த ஊரணி பொங்கல் நிகழ்ச்சியில் பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டனர். தேர் திருவிழாவையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மாரியம்மன் சுவாமியை தேரில் எழுந்தருளச் செய்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையை அடைந்த பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !