அத்திப்பட்டு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
ADDED :17 hours ago
திருவாலங்காடு: அத்திப்பட்டு மாரியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவாலங்காடு அடுத்த அத்திப்பட்டு மாரியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்றது. முக்கிய விழாவான தீமிதி விழா, நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு நடந்தது. வேண்டுதல் கொண்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது.