அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :17 hours ago
பரமக்குடி: பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் 34வது ஆண்டு ஆவணி திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
ஆக., 9 துவங்கி காப்பு கட்டப்பட்டு விழா நடக்கிறது. தினமும் அம்மன் மீனாட்சி, காமாட்சி, குமரி, மகாலட்சுமி உள்ளிட்ட அலங்காரங்களில் பூஜைகள் நடந்தது.
ராஜராஜேஸ்வரியாக கையில் கரும்பு ஏந்தி அம்மன் அருளினார்.
நேற்று மாலை வீடுகளில் முளைப்பாரி வளர்த்த பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இரவு 8:00 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இன்று(ஆக.18) காலை விரதமிருக்கும் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.