அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :16 hours ago
தேவிபட்டினம்: பனைக்குளம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில், ஆடி மாத நிறைவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
முன்னதாக மூலவருக்கு 18 வகையான அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
தொடர்ந்து பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு, மாங்கல்ய பூஜை, அர்ச்சனை உள்ளிட்டவைகள் செய்து வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.