உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுகை அருகே சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு

புதுகை அருகே சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு

புதுக்கோட்டை: புதுகை அருகே, பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், மெய்க்குடிப்பட்டியில், தொல்லியல் ஆய்வாளர் மணிகண்டன் குழுவினர் ஆய்வில், 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிற்பத்தை கண்டெடுத்தனர். மணிகண்டன் கூறுகையில், ‘‘கருங்கல்லால் ஆன இந்த சிற்பம், 3.5 அடி உயரம், 2 அடி அகலத்தில், அர்த்தபத்மாசன நிலையில், தியான கோலத்தில் உள்ளது. ‘ ‘துளையுடைய நீண்ட காதுகள், தலைக்கு மேல் முக்குடை அமைப்பு, பின்புறம் ஒளிவட்டம் மற்றும் இருபுறமும் சாமரம் வீசுபவர்களின் உருவங்கள் என, முற்காலச் சோழர் கலைப்பாணியில் செதுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !