காட்டூர் கன்னிமார் கருப்பராயர் கோவில் திருவிழா நிறைவு
கோவை; காட்டூர் ஸ்ரீ கன்னிமார் கருப்பராயர் கோவில் 15-ம் ஆண்டு திருவிழா கடந்த 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கியது முதல் நிகழ்வாக கணபதி ஹோமம் நடைபெற்றது இரண்டாம் நாள் திங்கட்கிழமை அன்று கோவை காட்டூர் பிள்ளையார் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து கருப்பராயர் கோவிலுக்கு வருதல் அதனையடுத்து அபிஷேகம் அலங்காரம் நடந்தது நிறைவாக தீபாராதனை நடைபெற்றது அன்று மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. மூன்றாம் நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை பொங்கல் திருவிழாவும் அதனை தொடர்ந்து இரவு கோவிலில் கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவு நாளான இன்று புதன்கிழமை பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கன்னிமார் கருப்பராயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் கலந்து கொள்ள கோவையின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.