உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் உலுப்பகுடி பேச்சியம்மன் கோவில் திருவிழா

நத்தம் உலுப்பகுடி பேச்சியம்மன் கோவில் திருவிழா

நத்தம்; நத்தம் அருகே உலுப்பகுடி பேச்சியம்மன் கோவில் ஆடி திருவிழவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் நேர்த்தி கடனாக கொடுத்த 500-க்கும் மேற்பட்ட கோழிகள், சேவல்கள் வெட்டப்பட்டு அம்மனுக்கு படையல் போடப்பட்டது. பின்னர் சாதத்துடன் கோழிகறி குழம்புடன் அன்னதானம் வழங்கபட்டது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !