உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் மழை வேண்டி திருப்பாவை பாடி மக்கள் வழிபாடு

கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் மழை வேண்டி திருப்பாவை பாடி மக்கள் வழிபாடு

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் மழை வேண்டி கிராம மக்கள் ஆண்டாள் பரசுரம், திருப்பாவை பாடியும், பூக்கள் வைத்து கொடி மரத்தைச் 27 முறை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.


வி.மேட்டுப்பட்டியில் கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கிராம மக்கள் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.இதில் கதிர் நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிக்கம்பத்தை பூக்கள் வைத்து 27 முறை கிராம மக்கள் சுற்றி வந்தனர். தொடர்ந்து கோயில் எதிரே உள்ள குளத்தில் மழை வேண்டி குழுவாக ஆண்டாள் பாசுரம், திருப்பாவை பாடி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் மேட்டுப்பட்டியைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் அறங்காவலர் ராஜசிம்மன் கூறுகையில் தமிழக முழுவதும் மலை வேண்டிய காலத்தில் மழை பெய்யாதால் நீர் நிலைகள் வறண்டு கடுமையான குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இந்த குடிநீர் பஞ்சத்தைப் போக்கும் வகையில் ஆண்டாலின் பாசுரம் பாடி, மழை வேண்டி பிரார்த்தனை செய்ததாகவும், தொடர்ந்து பிரார்த்தனை செய்தால் கடந்த காலங்களில் மழை பெய்ததாகவும் அதேபோல் இந்த ஆண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !