உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா செப். 9 முதல் 14 வரை நடக்கிறது. இதற்காக சித்தி புத்தி மகா கணபதி, ஐஸ்வர்யம் கணபதி, நந்தி வழிபாடு கணபதி, ஆதியோகி கணபதி, ஜல்லிக்கட்டு கணபதி என ஆறு வகையான விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. மாயூரநாதர் சுவாமி கோயில் நுழைவு பகுதியில் அமைந்துள்ள ஆதி வழி விடு விநாயகர் கோயில் அருகே இதற்காக சிலைகளுக்கு கடைசி கட்ட வண்ணம் தீட்டும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !