உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எளிமையான வாழ்வு நிம்மதி தரும்: காஞ்சி மஹாபெரியவர்

எளிமையான வாழ்வு நிம்மதி தரும்: காஞ்சி மஹாபெரியவர்

* நல்லவருடன் பழகு. அவர்களின் குணம் உனக்கும் வந்து விடும்.
* எளிமையான வாழ்வு நிம்மதியைத் தரும்.
* தர்ம சாஸ்திரத்தை கடைப்பிடி. மனதில் வைராக்யம் ஏற்படும்.
*கோயிலுக்கு வேண்டியதை செய்து கொடு. குடும்பம் தழைக்கும்.
* விநாயகரை வழிபடு. தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்.  
* நல்லதை நினைப்பதுடன் அதை செயலில் வெளிப்படுத்து.
* மந்திரங்களை சொல்லி வழிபடு; மனம் ஒருமுகப்படும்.
* குடும்பத்தை கவனி. அதுவும் சமுதாயக் கடமையே.
* பணத்தின் மீதுள்ள பேராசையை விடு. நிம்மதி காண்பாய்.
* உலகமே நலமுடன் வாழ வேத மந்திரம் ஓதப்படுகிறது.  
* பெற்றோரை போற்று. மனம், ஆன்மா நன்மை பெறும்.
* சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய். தீவினை அகலும்.
* ஆசையைக் குறை. பாவத்தை விட்டு மனம் விலகும்.  
* உன் வேலைகளை நீயே செய். மனதில் உறுதி உண்டாகும்.  
* வீண் பேச்சு வேண்டாம். நல்லதை மட்டும் பேசு.
* இசையின் மூலமாக கடவுளின் திருவடியை அடையலாம்.
* ‘எல்லாம் ஒன்றே’ என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம் வராது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !