அம்மாபாளையம் ஸ்ரீ சின்னண்ணன்,ஸ்ரீ பெரியண்ணன் கோவில் பொங்கல் திருவிழா
திருமுருகன்பூண்டி: திருமுருகன் பூண்டி நகராட்சி அம்மா பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சின்னண்ணன், ஸ்ரீ பெரியண்ணன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
அவிநாசி அடுத்த திருமுருகன் பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சின்னண்ணன், ஸ்ரீ பெரியண்ணன் கோவிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி சாமி சாட்டுதல், பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. அதனை தொடர்ந்து பட்டத்தரசி அம்மனுக்கு பொங்கல் வைத்து கொம்பன் கட்டுதல், படைக்களம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மதுரை வீரன் பூஜை, கரும்பு குடித்தல் பூஜை,அலங்கார பூஜை, கிளிபிடித்தல், கொம்பன் குத்துதல், பரணி கரும்பு குடித்தல், படுகளம் சாய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மஞ்சள் நீராட்டு,மறுபூஜையுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.