உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி ஹயக்ரீவர் கோவில் தேரோட்டம் விமரிசை

லட்சுமி ஹயக்ரீவர் கோவில் தேரோட்டம் விமரிசை

நங்கநல்லுார்: நங்கநல்லுார் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோத்சவ விழா தேரோட்டம், நேற்று விமரிசையாக நடந்தது.

நங்கநல்லுார், கண்ணன் நகரில் பிரசித்தி பெற்ற லட்சுமி ஹயக்ரீவர் கோவில் உள்ளது. கல்வி ஞானத்தின் தெய்வமாக வணங்கப்படும் இந்த கோவிலில், பிரம்மோத்சவ விழா தேரோட்டம், நேற்று நடந்தது.

பிரதான வீதிகள் வழியாக தேர் சென்று, மீண்டும் நிலையை வந்தடைந்தது. மாணவ – மாணவியர், கல்வி மேம்பாட்டுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

மதுரவாயல், ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவிலில் நேற்று, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு ராஜகோபுரம், விமான கலசம் மற்றும் கருவறைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இரவு 7:00 மணிக்கு வீதியுலா வந்த கங்கையம்மன், பொன்னியம்மனை பக்தர்கள் தரிசினம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !