உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூரில் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்புத்தூரில் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்புத்தூர் ரதவீதியில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

திருப்புத்தூர் கண்டரமாணிக்கம் ரோடு, தேரடி வீதி சந்திப்பில் உள்ள வீரமாகாளிம்மன் கோயிலில் தற்போது திருப்பணிகள் நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் ஆக.,21 மாலையில் ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் துவங்கியது. தொடர்ந்து ஆக.,22 காலையில் கணபதி ஹோமம், லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றன.

மாலையில் யாகசாலையில் கலசங்கள் பிரதிஷ்டை, முதலாம் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7:15 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை துவங்கியது. பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஏற்பாட்டினை கோயில் திருப்பணிக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !