உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோமங்கலம் கோவிலில் மகா கும்பாபிேஷகம்

கோமங்கலம் கோவிலில் மகா கும்பாபிேஷகம்

விருத்தாசலம்: கோமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாதர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, மாலை 5:00 மணிக்கு முதற்கால யாகபூஜை, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, அம் பாள் சுவாமி யந்திரங்கள் பதித்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.

முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 6:00 மணிக்கு 2ம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது.

8:30 மணிக்கு மேல், மங்கள வாத்தியங்களுடன் கலசங்கள் புறப்பாடு நடந்தது. கோமங்கலம் விருத்தகிரி சிவாச்சாரியார் தலைமையிலான வேத விற்பன்னர்கள் காமாட்சி அம்மன், கைலாசநாதர் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, கும்பாபிேஷகத்தை ந டத்தி வைத்தனர். பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !