உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

உத்திரமேரூர்: பாரதிபுரம் கிராம மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது.

உத்திரமேரூர் அடுத்த பாரதிபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் நடந்து வந்தன.

சமீபத்தில் அப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இம்மாதம் 21ம் தேதி, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக யாகசாலை பூஜை நடந்தது.

நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகள், கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

நேற்று காலை 9:30 மணிக்கு, மாரியம்மன் கோவில் யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து, காலை 9:45 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின் மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !