உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரநாயக்கன்பாளையத்தில் மஹா கும்பாபிஷேக விழா

சீரநாயக்கன்பாளையத்தில் மஹா கும்பாபிஷேக விழா

கோவை: சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, நேற்று பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.

ஆக., 21 காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், கோபூஜையோடு விழா துவங்கியது. செப்.,22 காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகளும் சிறப்பு பரிவார ஹோமங்களும் நடந்தன. இரவு 8 மணிக்கு ஸ்ரீ மாரியம்மனுக்கு யந்திரஸ்தாபனம் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது.

நேற்று காலை 7:30க்கு வேதிகார்ச்சனை, நாடிசந்தானம், யாத்ரதானம், கலசங்கள் ஆலயம் சுற்றி வந்தது. 9:40 மணிக்கு மேல் மூலஸ்தானம் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் திருக்கோயில் ஐந்து நிலை ராஜகோபுரங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

காலை 11 மணிக்கு அஷ்ட திரவிய அபிஷேகம், தசதரிசனம், அலங்காரபூஜை, மஹாதீபாராதனை, மஹா அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மாலை 5 மணிக்கு பாலவிநாயகர் கோயிலிலிருந்து புறப்பட்டு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !