சஞ்சீவிராயன்கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழா
ADDED :1 days ago
நடுவீரப்பட்டு: சஞ்சீவிராயன்கோவிலில் ஊரணி பொங்கல் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சஞ்சீவிராயன்கோவிலில் செல்வமாரியம்மனுக்கு 156 வது ஆண்டு ஊரணி பொங்கல் திருவிழா நடந்தது.
இதையொட்டி, கடந்த 21 ம் தேதி சாகை வார்த்தல் நடந்தது.
நேற்று காலை கோவிலில் இருந்து, ஊர்வலமாக சென்று, நடுவீரப்பட்டு–விலங்கல்பட்டு சாலையில் உள்ள ஐயனார் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் செய்து, ஊரணி பொங்கலிட்டு வழிபட்டனர்.
மதியம் 2:00 மணிக்கு பொங்கல் பானையுடன் ஊர்வலமாக செல்வமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா நடந்தது. வரும், 27 ம் தேதி மஞ்சள்நீராட்டு விழா நடக்கிறது.