உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொளக்காத்தம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி

கொளக்காத்தம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி

வாலாஜாபாத்: லிங்காபுரம் கிராமத்தில், கொளக்காத்தம்மன் கோவில் ஆவணி திருவிழாவையொட்டி, அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி, நேற்று விமரிசையாக நடந்தது.

வாலாஜாபாத் ஒன்றியம், லிங்காபுரத்தில் கிராம தேவதை கொளக்காத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆவணி மாத விழாவையொட்டி, இம்மாத 21ம் தேதி காலை, காப்பு கட்டுதல் நடந்தது. அன்று பகல் 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில், பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர்.

நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு, குடம் அலங்காரத்தில் பூங்கரகம் வீதியுலா நடந்தது. இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனையை தொடர்ந்து, இரவு 10:00 மணிக்கு அர்ச்சுனன் தபசு நாடகம் நடைபெற்றது.

நாடகத்தில் கவுரவர்களுக்கு எதிரான குருஷேத்திர யுத்தத்தில் வெற்றி பெற பாசுபத அஸ்திரம் வேண்டி, அர்ச்சுனன், தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

அப்போது, நாடக கலைஞர் ஒருவர், அர்ச்சுனன் வேடம் அணிந்து, 50 அடி உயர தபசு மரத்தில் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடிய நிகழ்வு, அங்கிருந்தோரை கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !