உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா

ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர விழா

செங்கல்பட்டு: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், 18ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.

செங்கல்பட்டு, சின்ன மேலமையூர் பிள்ளையார் கோவில் தெருவில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது.

இங்கு, 18ம் ஆண்டு ஆடிப்பூர விழாவையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், சிறப்பு கவச விளக்கு பூஜை, சக்தி பீட தலைவர் வேலு தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.

அதை தொடர்ந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன்பின், ஆதிபராசக்தி அம்மனுக்கு பாலாபிஷேக விழாவை, மாவட்ட தலைவர் வேலு தலைமையில், காலை 11:30 மணிக்கு, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நீதிதேவன், ஆன்மிக இயக்க பொருளாளர் மன்மதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, நீண்ட வரிசையில் வந்த செவ்வாடை பக்தர்கள், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பிற்பகல் 2:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன்பின், ஆதிபராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !