பெரியகுளம், தென்கரையில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
ADDED :19 hours ago
பெரியகுளம்: பெரியகுளம், தென்கரை, வணிகவைசிய குல சங்கத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்ஸவம் நடந்தது. வணிகவைசிய அபிவிருத்தி சங்கத்தில் நடந்த பிட்டு திருவிழாவில் நடராஜர், சிவகாமி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினர். அர்ச்சகர் துரைக்கண்ணன் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை அர்ச்சகர்கள் நடத்தினர். சுவாமி அம்மன் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தனர்.பாராட்டு விழா: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மணிவண்ணன், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகேசன் மற்றும் உறுப்பினர்கள் செய்தனர்.