பழநி வேளீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :9 hours ago
பழநி: பழநி வேளீஸ்வரர் கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு கலசபூஜை நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உபகோவிலான சன்னதி வீதியில் உள்ள வேளீஸ்வரர் கோயிலில் இன்று வருடாபிஷேகம் நடைபெற்றது.அதில் சிறப்பு கலசபூஜை நடைபெற்றது. கலச நீர் கோயில் வளாகத்தில் சுற்றி எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.