உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா

கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா

வடவள்ளி: வடவள்ளியில் உள்ள பெரியநாயகி உடனுறை கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் ஆண்டு விழா மற்றும் ராஜயோக ஆஞ்சநேயர் சன்னதி குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடந்தது.


வடவள்ளி, ஆர்.கே.எஸ்., நகரில், பெரியநாயகி உடனுறை கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின், மூன்றாம் ஆண்டு விழா மற்றும் கோயிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராஜயோக ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் புதிய கொடிமரத்திற்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நேற்று மூத்த பிள்ளையார் வழிபாடுடன் துவங்கியது. தொடர்ந்து முதல் கால வேள்வி நடந்தது. இன்று காலை, 6:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், அதனை தொடர்ந்து இரண்டாம் கால வேள்வியும் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, யாகசாலை மண்டபத்தில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 10:10 மணிக்கு, ஸ்ரீ ராஜயோக ஆஞ்சநேயர் சன்னதியில், திருக்குடமுழுக்கு வெகு சிறப்பாக நடந்தது. அதன்பின், புதிய கொடிமரத்திற்கும் குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து, பெரியநாயகி உடனுறை கங்கைகொண்ட சோழீஸ்வரர், சிவகாமசுந்தரி உடனுறை ஆனந்த நடராஜ பெருமான், பைரவர், சூரியன், சந்திரன், ஸ்ரீ ராஜயோக ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !