செஞ்சி ரேணுகாபரமேஸ்வரி கோவிலில் திருமாங்கல்ய தாரண உற்சவம்
ADDED :1 days ago
செஞ்சி: சோ. குப்பம் ரேணுகாபரமேஸ்வரி கோவிலில் திருமாங்கல்ய தாரண உற்சவம் நடந்தது. செஞ்சி அடுத்த சோ.குப்பம் ரேணுகாபரமேஸ்வரி கோவிலில் சாகை வார்த்தல் மற்றும் திருமாங்கல்ய தாரண உற்சவம் கடந்த 24ம் தேதி துவகியது. முதல் நாள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. 2 ம் நாள் நிகழ்ச்சியாக 25ம் தேதி பகல் 2.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 5.00 மணிக்கு அம்மனுக்கு திருமாங்கல்யம் சாற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. 3ம் நாள் விழாவாக நேற்று ஒரு லட்சம் வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்தனர். அப்போது நடந்த பூஜையில் பங்கேற்ற 500 பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலி சரடு உள்ளிட்ட சுமங்கலி தாம்பூலம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.