உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

 புதுச்சேரி லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் 55ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில், லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், 55ம் ஆண்டு, பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, நேற்று மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !