உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு

மதுரை; மதுரை; மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு செய்தார்.


17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடப்பதை முன்னிட்டு செப்.,6 முதல் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகளும், செப்.,11 முதல் 17 காலை வரை யாகசாலை பூஜையும் நடக்கிறது. குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கோவிலில் ஆய்வு மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையாளர் எஸ். ராஜேந்திரன், இ.கா.ப., சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி. கருப்பையா, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.கோபிசன், மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் மதார் பதூருதின் ,மாநகராட்சி துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !