கிணத்துக்கடவு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :1 days ago
கிணத்துக்கடவு: சென்றாம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
கிணத்துக்கடவு, சென்றாம்பாளையம் மாகாளியம்மன், முனீஸ்வரன், எதிரடி முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் கடந்த, 26ம் தேதி, மங்கள இசை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து விமான கலசம் நிறுவுதல் மற்றும் அஸ்தபந்தன மருந்து சாற்றுத்தல் உள்ளிட்ட நிகழ்வு நடந்தது. இன்று 27ம் தேதி, நவக்கிரக ஹோமம், பரிவார தேவதைகள் ஹோமம், நாடி சந்தானம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.