அய்யலுார் சுப்பிரமணியர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :9 hours ago
வடமதுரை: அய்யலுாரில் திருச்சி ரோடு கடவூர் பிரிவு அருகில் இருக்கும் தஞ்சை ஸ்ரீ ஜோதிவேல் சுப்பிரமணியர் கோயிலில் 2024ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று 2ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து ஸ்ரீ வள்ளி, தேவசேனையுடன் சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் நடந்தது. பின்னர் அய்யலுார் கடை வீதி வழியே சுவாமி திருவீதியுலா நடந்தது. ஏற்பாட்டினை குருசாமிகள் ஜோதிவேல் சுப்பிரமணியன், பிரேமாராணி, பழநி பாத யாத்திரை பக்தர்கள் செய்திருந்தனர்.