உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காந்தாரி அம்மன் கோயிலில் 31 முறை பூக்குழி இறங்கிய கோயில் பூஜாரி பக்தர்கள் பரவசம்

காந்தாரி அம்மன் கோயிலில் 31 முறை பூக்குழி இறங்கிய கோயில் பூஜாரி பக்தர்கள் பரவசம்

பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே களிமண்குண்டு கிராமத்தில் பழமை வாய்ந்த காந்தாரி அம்மன் கோயில் உள்ளது. 156ம் ஆண்டு முளைக்கொட்டு மற்றும் பூக்குழி உற்ஸவத்தை முன்னிட்டு 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10:00 மணிக்கு காந்தாரியம்மன் கோயில் வளாகம் முன்புறம் அக்னி வளர்க்கப்பட்டு நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இக்கோயிலின் அம்மன் சக்தி கரக பூஜாரி முத்துக்கருப்பன் 60, இதர நேர்த்திக்கடன் பக்தர்கள் ஒரு முறை அம்மனை நினைத்து பூக்குழி இறங்கிய நிலையில் பூஜாரி முத்துக்கருப்பன் 31 முறை பூக்குழி இறங்கினார். சாதாரணமாக தரையில் நடப்பது போன்று பூக்குழியில் தொடர்ந்து இறங்கி நடந்ததால் அப்பகுதி மக்கள் பக்தி பரவசம் அடைந்தனர். அம்மன் கரகம் கோயிலுக்கு சென்றது. நேற்று காந்தாரி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, துள்ளு மாவு ஊர்வலம் உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை களிமண்குண்டு கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !