புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் திருவோணம் கோலாகல கொண்டாட்டம்
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஓணம் (திருவோணம்) பண்டிகை கொண்டாட்டங்கள் கேரள பக்தர்களால் விமரிசையாக நடைபெற்றது.
கேரள மக்களின் மிகவும் போற்றப்படும் பண்டிகையான திருவோணத்தை, பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தெய்வீக முன்னிலையில் பக்தர்கள் கொண்டாடும்போது, பிரசாந்தி நிலையமே கேரளத்தின் கலாச்சாரச் சிறப்பையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் களமாகத் திகழ்கிறது. இப்பண்டிகைக்காக ஆசிரமம் கேரளத்திற்கே உரிய திருவிழாக் கோலத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. பகவானின் சந்நிதிக்கு முன்னால் இடப்பட்டுள்ள பிரம்மாண்டமான பூக்கோலம் பாரம்பரிய அழகிற்கு மேலும் மெருகூட்டுகிறது; அதன் நுணுக்கமான வடிவமைப்புகளும் வண்ணமயமான மலர்களும் பகவானின் திருவடிகளில் அன்பின் நறுமணமிக்க காணிக்கையாகச் சமர்ப்பிக்கப்படுகின்றன. கேரளத்தின் பரிச்சயமான காட்சிகள், ஒலிகள் மற்றும் பக்தி மரபுகள் கொண்டாட்டங்களுக்கு ஒரு தனித்துவமான இதமான உணர்வை அளித்து, பிரசாந்தி நிலையத்திலேயே ஓணம் பண்டிகையின் ஆன்மாவை உயிர்ப்பிக்கின்றன.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் பகவானின் நேரடி தெய்வீக முன்னிலையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் வாய்ப்பை அருள்பாலித்து வருகிறார். 1970-களின் முற்பகுதியிலிருந்து, கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவிலிருந்து வரும் பக்தர்கள் மீது பகவான் கொண்டுள்ள அளவற்ற அன்பையும் கருணையையும் பிரதிபலிக்கும் வகையில், இக்கொண்டாட்டங்கள் ஒரு போற்றத்தக்க வருடாந்திர மரபாகத் திகழ்கின்றன. அதன்படி இன்று திருவோண நாளில் பிரபல கலைஞர்களின் பக்தி இசை நிகழ்ச்சிகள் மற்றும் வேத பாராயணம் நடைபெற்றது. புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர் கவலம் ஸ்ரீகுமார் மற்றும் , வயலின் இசை அட்டுகல் பாலசுப்ரமணியம், புல்லாங்குழலில் எஸ். ஸ்ரீராக், மிருதங்கத்தில் சாய் தத் மற்றும் தப்லாவில் ஜகதீஷ் கனடியா ஆகியோர் பங்கேற்றனர். இந்த இசை நிகழ்ச்சியில் ஸ்ரீ கணபதியுடே, ஒருநேரமெங்கிலம், நாராயணம் பஜே, ராமுனி கார்யமு, கிருஷ்ணா நீ வேகனே பாரோ, பிபரே ராம ரசம் மற்றும் ரிதம்பரே வசுந்தரே (சுவாமி குறித்த மலையாளப் பாடல்) ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. ஓணம் பண்டிகையின் உண்மையான முக்கியத்துவம் குறித்த பகவானின் தெய்வீகச் செய்தியுடன் இக்கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றது.