உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம்... அன்பின் பயணம். .திருப்பூருக்கு வந்தது

ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம்... அன்பின் பயணம். .திருப்பூருக்கு வந்தது

திருப்பூர்; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் அன்பு, சேவை, மனிதநேயப் போதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பயணித்து வரும் ஸ்ரீ சத்ய சாயி பிரேம ரதம், இன்று திருப்பூருக்கு வந்தது. ராம்நகரில் ரதத்தை சாயி பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் வரவேற்றனர்.


திருப்பூர் மாவட்ட ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் சார்பில், ராம்நகருக்கு வந்த பிரேம ரதத்துக்கு ராம்நகர் சமிதி அமைப்பு சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வேதம் மற்றும் பஜன் பாராயணங்களுடன் பக்தர்கள் ரதத்தை வரவேற்றனர்.  தொடர்ந்து, ராம்நகர் பகுதியில் பிரேம ரதம் திருவீதி உலா வந்தது. ரதத்தின் முன் பால விகாஸ் குழந்தைகளின் சாயி கும்மி நடைபெற்றது. மங்கள ஆரத்தியைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருப்பூரில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள பிரேம ரதம், இன்று வேலம்பாளையம் செல்கிறது. தொடர்ந்து வித்ய மந்திர் பள்ளி, அம்மாபாளையம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலயா உள்ளிட்ட பகுதிகளுக்கும் செல்ல உள்ளது. மேலும், காங்கயம், உடுமலை, வெள்ளகோவில் உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரேம ரதம் வலம் வர உள்ளதாக, மாவட்ட ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !