அன்னூர் கருப்பராயன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
அன்னூர்: கருப்பராயன் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னூர், சிறுமுகை சாலையில், கலாமணி நகரில், கருப்பராயன் சுவாமி கோவிலில், புதிதாக வள்ளி தெய்வானை சமேத, ஆறுமுக சுப்பிரமணிய சாமி, வாராஹி அம்மன், கரிய காளியம்மன், சரஸ்வதி, பண்ணாரி அம்மன் சமேத நவகிரகங்கள், சொர்ண ஆகார்சன பைரவர் மற்றும் பரிவார தெய்வங்கள் நிறுவப்பட்டுள்ளன. திருப்பணிகள் முடிந்ததையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த 25ம் தேதி காலை விநாயகர் வழிபாடுடன் துவங்கியது. காலை 10:00 மணிக்கு விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மாலையில் முளைப்பாளிகை மற்றும் தீர்த்த குடங்கள் அன்னையின் இல்லத்தில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. இன்று காலை 5:30 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து தச தரிசனம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.