பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜருக்கு அபிஷேகம்
ADDED :2 days ago
பழநி: பழநியில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு நேற்று மாலை நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. மாணிக்கவாசருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. முன்னதாக சிறப்பு யாகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.