அழகர்கோவிலில் நாதாஞ்சலி
ADDED :4 days ago
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் மீனாட்சி சொக்கர் சைவ சமய அறக்கட்டளை சார்பில் கர்நாடக இசை பாடகிஎம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ‘நாதாஞ்சலி’ எனும் இசைஅஞ்சலி நடந்தது.
மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். சென்னை வீணை இசைக் கலைஞர் விஜயலட்சுமி குழுவினர், மதுரை டி.வி.எஸ்., பள்ளி மாணவர்கள் சுபா பாரதி குழுவினர் இசை மற்றும்நாட்டியம் மூலம் அஞ்சலி செலுத்தினர்.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைமை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி முதல்வர் வித்யாவதி, சத்குரு சங்கீத வித்யாலயா இசை கல்லுாரி முதல்வர் ருக்மணி பங்கேற்றனர்.
அறக்கட்டளை இயக்குநர் ரமஷே் ஏற்பாடுகளை செய்திருந்தார்.